திருச்சி விமான நிலையத்தில் தொடரும் தங்க கடத்தல்: மேலும் ஒரு சுங்க துறை அதிகாரி பணியிட மாற்றத்தால் அதிகாரிகள் கலக்கம்

Author: Udhayakumar Raman
16 September 2021, 5:32 pm
Quick Share

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து தங்கம் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் தொடர்ந்து கடத்தல் சம்பவத்தின் காரணமாக சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்கத் துறை ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் மட்டும் சுமார் 8கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் சுங்கத் துறை துணை ஆணையராக பணிபுரிந்து வந்த சரவணக்குமார் சுங்கத்துறை அலுவலகத்திலிருந்து வேறு பிரிவிற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த இடத்திற்கு சரவணக்குமாருக்கு பதிலாக தேவேந்திர வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Views: - 113

0

0