துணி துவைத்துக் கொண்டிருந்த போது பள்ளி ஆசிரியரிடம் தங்க தாலி பறிப்பு: கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை

Author: Udhayakumar Raman
1 July 2021, 4:32 pm
Quick Share

திருச்செந்தூர்: உடன்குடியில் நேற்று இரவு வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது பள்ளி ஆசிரியரிடம் 7.1/2 பவுன் தங்க தாலியை சுவரேறி குதித்து வந்து பறித்து சென்ற மர்ம நபர் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி புதுமனை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த ஜான் சுந்தர்ராஜ் மனைவி வசந்தி. இவர் உடன்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் ஏறி குதித்து வந்த மர்ம நபர் வசந்தி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க தாலியை பறித்துச் சென்றுள்ளார். உடனே வசந்தி கூச்சலிட்டதும், வீட்டில் இருந்த குடும்பத்தினர் ஓடிவந்து அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் அந்த மர்ம நபர் மேல் சட்டை அணியாமல் முகத்தில் துணியை அணிந்திருந்துள்ளார். இதுகுறித்து வசந்தியை அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வசந்தி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அனைத்தும் பதிவானதால் காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 194

0

0