சமூக இடைவெளியின்றி அரசு அலுவலகத்தில் குழுமிய பொதுமக்கள்: கொரோனா அதிகரிக்க வழிவகை செய்வதாக குற்றச்சாட்டு

7 July 2021, 4:32 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரபதிவு துறை அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி பொது மக்கள் குழுமியதால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகை செய்யும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று முதல் அலை முடிந்த பிறகு 2 வது அலை மிக தீவிரமாக இருந்த நிலையில் தமிழக அரசு பொது மக்கள் நலன் கருதி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டது. பின்னர் கொரேனா தொற்று குறைந்ததையடுத்து அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் முககவசம், சமூக இடைவெளியுடன் பணியாற்ற உத்தரவு பிறப்பித்தது. அலுவலகத்திற்கு பணிநிமிர்த்தமாக வரும் பொது மக்களும் இத்தகைய கட்டுபாடுகளுடன் அலுவலகத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு செயல்பட்டு வரும் நிலையில்,

இன்று தருமபுரியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரபதிவு துறை அலுவலகத்தில் ஏராளமான பொது மக்கள் பத்திரபதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அலுவலகத்திலும், அலுவலக வளாகத்திலும் எந்த வித சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும், முறையாக முககவசம் அணியாமலும் காலை முதலே அதிக அளவில் கூட்டமாக இருந்தனர். இதை அந்த அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இந்தமாதிரியான அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் அரசு அலுவலகத்தில் கூட்டமாக பொது மக்கள் குழுமியதால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகை செய்யும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Views: - 152

0

0