அரசு பேருந்து-லாரி மோதி விபத்து: ஓட்டுனர்கள் காயம்

Author: Udhayakumar Raman
28 November 2021, 4:36 pm
Quick Share

திருவாரூர் : மன்னார்குடி அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் இருவர் காயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து நெல் அரசு நெல் கிடங்கிலில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நீடாமங்கலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி பயணிகளுடன் வந்த அரசு பேருந்து மன்னார்குடி அருகே ரொக்ககுத்தகை கிராமம் அருகே வந்த போது எதிர்பாராமல் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியும் அரசு பேருந்தும் மோதியதில் பேருந்து மற்றும் லாரி ஓட்டுனர்கள் இருவரும் காயமடைந்தனர்.

விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. பேருந்தில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாலை விபத்தால் சுமார் ஒருமணி நேரம் மன்னார்குடி நீடாமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 171

0

0