அரசு பேருந்து கவிழ்ந்த விபத்து: காயமடைந்த பயணிகளை ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல்

24 November 2020, 9:14 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பயணிகளை மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

கோவையில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள வாவிக்கடை அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது முன்பு சென்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதல் ஏற்படாமல் இருக்க பேருநது நெடுஞ்சாலையில் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 30க்கும மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Views: - 14

0

0