தாய்மார்கள் காய்கறி தோட்டம் அமைக்க அரசு கொறடா அறிவுரை

21 September 2020, 10:57 pm
Quick Share

அரியலூர்; தாய்மார்கள் காய்கறி தோட்டம் அமைக்க முன்வர வேண்டும் என அரியலூர் நகராட்சியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அரசு கொறடா அறிவுரை வழங்கினார்.

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதத்தினையொட்டி ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியினை அரசு தலைமை கொறடா தாமரை. இராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர். பின்னர் ஊட்டச்சத்து உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கமும் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அரசு தலைமைக் கொறடா தாமரை இராஜேந்திரன், ஊட்டச்சத்தை அதிகரிக்க தாய்மார்கள் தங்கள் இல்லங்களை சுற்றி காய்கறி தோட்டம் அமைக்க முன்வரவேண்டும் என கூறினார். இதில் அரியலூர் நகராட்சி ஆணையர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.