சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவது தமிழக அரசுதான்:அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

7 November 2020, 6:31 pm
Quick Share

தருமபுரி: இந்தியாவிலேயே இல்லாத சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவது தமிழக அரசுதான் என உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றியங்களில் 411 நபர்களுக்கு வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 2 கோடியே 58 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். அதனை தொடர்ந்து பயனாளிகளிடம் பேசிய அவர்,

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்த முடியாத திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவாதகாவும், மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக தமிழக அரசு உள்ளது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 15

0

0