லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு ஒன்பது வருடம் சிறை தண்டனை: செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு…

Author: Udhayakumar Raman
21 September 2021, 1:50 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு ஒன்பது வருடம் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள தொழிலாளர் நல மையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பத்மநாபன். இவரிடம் கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய தேசிய தொழிலாளர் நல சங்க பொதுச்செயலாளர் ஆனந்தி என்பவர் 91-நபர்களுக்கு நலவாரிய அட்டை பெறுவதற்காக மனு அளித்துள்ளார். தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்குவதற்காக ஆயிரம் ரூபாயை லஞ்சமாக உதவி ஆய்வாளர் பத்மநாபன் கேட்டுள்ளார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஆனந்தி புகார் அளிக்க அங்கு வந்து மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்மநாபன் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பத்மநாபனுக்கு ஒன்பது வருடம் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பிரியா உத்தரவிட்டார். தொடர்ந்து பத்மநாதனுக்கு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

Views: - 144

0

0