குமரி விவேகானந்தா ஆசிரமத்திற்குள் நுழைந்து அவதூறாக பேசிய அரசு அதிகாரிகள்.! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு

9 April 2021, 4:31 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா. சோமன், மாவட்ட செயலாளர் ஆனந்த், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச்செயலாளர் காளியப்பன் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது; வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் கடந்த மூன்று தலைமுறைகளாக மக்களுக்கு ஆன்மீக தொண்டு செய்து வருவதாகவும், கடந்த ஐந்தாம் தேதி தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி மேரி ஸ்டெல்லா தலைமையிலான பறக்கும் படையை சேர்ந்த சுமார் 8 பேர் ஆசிரமத்திற்குள் அத்துமீறி நுழைந்து இந்துக்கள் புனிதமாக நினைத்து வரும் ஆசிரமங்களில் காலில் செருப்பு சென்று சோதனை மேற் கொண்டதாகவும், சுவாமி சைதன்யானந்தஜீ மஹாராஜ், ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டதற்கு அவரை ஒருமையில் பேசி தேர்தலுக்கு பணம் கொடுக்கிறீர்களா என கேட்டுள்ளனர். இந்துக்கள் புனிதமாகக் கருதும் ஆசிரமத்தின் புனிதத்தை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் நடந்துள்ள அதிகாரிகள் மீது விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

Views: - 22

0

0