நீட் தேர்வு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர வேண்டும்:கார்த்தி ப.சிதம்பரம் பேட்டி…

Author: Udhayakumar Raman
15 September 2021, 7:54 pm
Quick Share

திருச்சி: நீட் தேர்வு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என கார்த்தி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் மருங்காபுரி(தெ) இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் தினேஷ்பாபு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம், நீட் தேர்வு காங்கிரஸ் கொண்டு வந்தது என கூறும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சரித்திரம் தெரியுமா என்பது தெரியாது, ஆனால் சரித்திர விபத்தில் அரசியல் பதவிக்கு வந்தவர், சரித்திர பிழையால் முதல்வரான முன்னாள் முதல்வர் பழனிச்சாமி. நீட் அமுலுக்கு வந்தது எந்த ஆண்டு என தெரிந்திருக்க வேண்டும் என கூறினார்.

நீட் என்பது தமிழகத்தில் உணர்ச்சிக்குட்பட்ட விஷயமாகிவிட்டது, நீட் என்பது தான் எல்லா மாணவர்களுக்கு மன அழுத்தத்திற்கு காரணம் என்று சொல்ல முடியாது, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் கூட மதிப்பெண் குறைந்த நிலையில் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இந்த மன உளைச்சல் போக்க மாணவர்களுக்கு கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒரு தேர்வு மூலமாகவே நமது வாழ்கை நிர்ணமாகிறது என்ற மனபான்மையை போக்க சமுதாயமும், பெற்றோர்களும் மாணவர்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அரசியல் கட்சி போக்கால் இது நடைபெறுகிறது என சொல்ல முடியாது.

பாஜக-வை தவிர அனைத்து கட்சிகளும் நீட் வேண்டாம் என்றுதான் நினைக்கிறோம். இதை சட்ட ரீதியாக தான் விலக்க முடியுமே தவிர தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றி அதை நீக்க முடியாது என்பது தான் எதார்த்த உண்மை. நுழைவு தேர்வுகளை நாம் பல இடங்களில் சந்தித்து தான் வருகிறோம், இது புதிய வழிமுறைகள் கிடையாது. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைய வேண்டும், நீட் தேர்வு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு இருப்பதை நான் முழுமையாக வரவேற்கிறேன். அது தொடர வேண்டும்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில செயலாளர் ரமேஷ்குமார், வையம்பட்டி ஒன்றிய துணைத்தலைவரும், மகிளா கங்கிரஸ் மாநில செயலாளருமான ஸ்ரீவித்யா ரமேஷ்குமார், திருச்சி(தெ) மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிவகங்ககை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஓ.பி.சி அணி மாவட்டச்செயலாளர் தமிழரசன், மருங்காபுரி(தெ) வட்டார தலைவர் ரெங்கன், மகிளா காங்கிரஸ் தெத்தூர் ராசாத்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Views: - 95

0

0