அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக இருக்கக் கூடிய அரசு.! டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேச்சு

23 February 2021, 5:26 pm
Quick Share

கன்னியாகுமரி: முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக இருக்கக் கூடிய அரசு என விவசாய கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

குமரி மாவட்டம் தோவாளையில் நடைபெற்ற விவசாய பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் 1121 பயனாளிகளுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் இன்று வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது;- முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு இரண்டு முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது .நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. இந்த ஆட்சியில் தான் இதுபோன்ற நன்மைகள் கிடைக்கும் .

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக இருக்கக் கூடிய அரசு என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்ட கடலோர மக்களின் நன்மை கருதி ஒருபோதும் மீனவர்களுக்கு எதிரான செயலில் இந்த அரசு செயல்படாது. அது துறைமுகமாக இருந்தாலும் சரி ,மக்கள் விரோத செயலில் எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் மீனவர்களுக்கு எதிராக அதிமுக செயல்படாது என தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார் .நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளர் சங்கரன், மேலாளர் ஸ்டாலின் தேவசகாயம் ,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி பகவதி அம்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Views: - 8

0

0