காய்கறி மாலையுடன் ஆளுநர் மாளிகைக்குள் உள்ளே செல்ல முயன்ற மகளிர் காங்கிரஸ்

13 November 2020, 7:54 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளிக்கு வழங்கக்கூடிய இலவசப்பொருட்களுக்கு வங்கியில் பணம் செலுத்தப்பட்டதை கண்டித்து காய்கறி மாலையுடன் ஆளுநர் மாளிகைக்குள் உள்ளே செல்ல முயன்ற மகளிர் காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை, மற்றும் வேஷ்டி சேலை வழங்கப்படுவது வழக்கம் ஆனால் அதை நேரடியாக வழங்கக்கூடாது என மருத்த ஆளுநர் கிரண்பேடி அதற்கான பணத்தை பயனாளிகள் வங்கி கணக்கில் போடப்பட்டது. ஆனால் சொற்பத்தொகையை வங்கிக்கு சென்று பெண்களால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்துள்ளதாக கூறி வெங்காயம்,

உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிவித்துக்கொண்டு முதல்வர் நாராயணசாமியின் மகள் விஜயகுமாரியுடன் 100க்கும் மேற்பட்ட மகளிர் காங்கிரசார் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனையடுத்து புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து கலைய செய்தனர்.

Views: - 13

0

0