மூதாட்டியை ஏமாற்றி 3 .63 ஏக்கர் விவசாய நிலம் அபகரிப்பு… மீட்டு தரக்கோரி சார்பதிவாளரிடம் மூதாட்டி மனு
3 August 2020, 7:08 pmதிருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே 80 வயது மூதாட்டியை ஏமாற்றி 3 .63 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிப்பு செய்துள்ளதை மீட்டு தரக்கோரி சார்பதிவாளரிடம் மூதாட்டி கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் பெத்தக்கல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க முனியம்மா என்பவருக்கு சொந்தமான 3.63 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முனியம்மாள் தனது நிலத்தை ஒரு மகள் மற்றும் மூன்று மகன்களுக்கு பாகப்பிரிவினை செய்து பத்திரப் பதிவு செய்வதற்காக தனது மூத்த மகன் மணியிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நான்கு பேரின் பெயரில் பத்திர பதிவு (செட்டில்மெண்ட்) பத்திரம் எழுதுவதாக கூறி மூதாட்டியை முத்த மகன் மணி வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது 3.63 ஏக்கர் விவசாய நிலத்தை ஒருவர் பெயருக்கு மட்டுமே பத்திரம் எழுதி மூதாட்டிக்கு தெரியாமல் அவரிடம் கையொப்பம் வாங்கி மூத்த மகன் மணி நிலத்தை அபகரித்துள்ளார். மேலும் சார்பதிவாளரும் பத்திரம் பதிவு செய்யும் போது தன்னிடம் எதுவும் கேட்கவில்லை எனவும் மூதாட்டி குற்றம்சாட்டியுள்ளார். இதனை அறிந்த மற்ற 3 பிள்ளைகளான ராஜா, நாகம்மாள், தேவராஜ் ஆகிய மூன்று பிள்ளைகளுக்கும் சொத்தை எழுதி வைக்காதது தெரிந்த மூதாட்டி வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் அவரது மூத்த மகன் மணி என்பவர் ஏமாற்றி கையெழுத்து வாங்கி 3.63 செண்ட் விவசாய நிலத்தை அபகரித்துள்ளதை மீட்டு தரக்கோரி புகார் மனு அளித்துள்ளார்.