மளிகை கடையில் கொள்ளை: 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் திருட்டு

Author: kavin kumar
15 October 2021, 3:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மளிகை கடையின் பூட்டை மர்ம நபர்கள் சாமர்த்தியமாக திறந்து உள்ளே சென்று 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை தடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மூலகுளம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் பரமேஸ்வரி. இவர் தனது வீட்டின் பக்கத்து தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று ஆயுதபூஜை என்பதால் கடையில் பூஜை செய்துவிட்டு இரவு பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை மளிகை கடை திறந்து இருப்பதாக பக்கத்தில் இருப்பவர்கள் கூறியதை அடுத்து தனது கடைக்கு விரைந்து வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் மளுகை கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்து இருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட், அரிசி மூட்டைகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பரமேஸ்வரி திருட்டு சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Views: - 319

0

0