17 வயது சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது !!!

Author: Udhayakumar Raman
1 September 2021, 3:31 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 17 வயது சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த மாப்பிள்ளை உள்ளிட்ட மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த முருகப்பெருமான் என்பவரது மகன் சக்திவேல் (18) இவர் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமிற்கு ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயத் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு சக்திவேல் நண்பர்களான சுபாஷ் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் உதவியதாக கூறப்படுகிறது . மேலும் கட்டாய திருமணம் செய்த சிறுமி தொடர்ந்து அழுது வந்ததாலும் தன்னை வீட்டில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டதன் பேரில் சக்திவேல் தனது கிராமமான விருகாவூரில் அந்த சிறுமியை விட்டிருக்கிறான்,பிறகு வீடு சென்றடைந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூற சிறுமியின் தந்தை வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கட்டாயத் திருமணம் செய்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களான வெற்றிவேல்,சுபாஷ் என மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வரஞ்சரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 95

0

0