நிலக்கடலை விளைச்சல் குறைவு : விவசாயிகள் கோரிக்கை!!
10 September 2020, 7:34 pmதிருப்பூர் : தொடர் மழையின் காரணமாக நிலக்கடலை விளைச்சல் குறைந்துள்ளதால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பெருமாநல்லூர், தொரவலூர், சேவூர் மற்றும் ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் நிலக்கடலை ஆண்டுதோறும் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கோடை மழை ஓரளவு பெய்ததன் காரணமாக மானாவாரி நிலங்களில் அதிக அளவில் விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். தற்போது நிலக்கடலை அறுவடை துவங்கியுள்ள நிலையில்,பயிரிட்டது முதல் தொடர் மழை பெய்து வந்ததால் வெயில் குறைந்து செடிகள் மட்டும் வளர்ந்ததால் காய்கள் அதிகளவில் பிடிக்கவில்லை.இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்துள்ளது.
தற்பொழுது நிலக்கடலை கிலோ ரூ.48 வரை மட்டுமே விற்பனையாவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு ஏக்கரில் நிலக்கடலை பயிரிட ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில்,எனவே நிலக்கடலையின் குறைந்தபட்ச விலையை ரூ.65 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
0
0