வெள்ளப்பெருக்கு காரணமாக பொன்னை ஆற்றின் தரைப்பாலம் மூடல்:மக்களுக்கு அனுமதி மறுப்பு

Author: kavin kumar
9 October 2021, 4:27 pm
Quick Share

வேலூர்: வெள்ளப்பெருக்கு காரணமாக பொன்னை ஆறு மற்றும் பாலாற்று பகுதிகளில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், திருவலம் அருகேயுள்ள பொன்னை ஆற்றில் ஆந்திர மாநிலம் கலவகுட்லா ஆற்றில் ஏற்பட்ட அதிக அளவு வெள்ள பெருக்கால் வினாடிக்கு 3000 கன அடி நீரானது வெளியேறி பொன்னை ஆற்றில் நீரானது வெள்ளமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் பொன்னை ஆறு மற்றும் பாலாற்று பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க குளிக்க பார்வையிடவும் செல்ல வேண்டாம். மேலும் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ராணிப்பேட்டைமாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் இருகரையிலும் மக்கள் யாரும் செல்லவோ குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இதே போன்று மோர்தானா அணையில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்போது உபரி நீர் வலதுபுற கால்வாய் மற்றும் இடது புற கால்வாயில் திருப்பிவிட்டப்பட்டு நீரானது ஏரிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கபடுகிறது. ஆனால் சிலர் கால்வாய்களை சேதப்படுத்தி தண்ணீர் ஏரிகளுக்கு செல்வதை தடுக்கின்றனர். இவ்வாறு செய்பவர்களின் மீது குண்டதடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கபடும் பாலாற்றிலிருந்து செல்லும் கால்வாய்கள் மதகுகளை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிக்கையில் கூறியுள்ளார். பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக ஏரிகள் நீர் வேகமாக நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 702

0

0