கல்மார் இயந்திரத்தில் சிக்கி காவலாளி உயிரிழப்பு: உடலைப் பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்

11 September 2020, 9:36 pm
Quick Share

சென்னை: மாதவரத்தில் கல்மார் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த தந்தையின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அங்கு பணிபுரியும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ எல்ஐஜி காலனி மூன்றாவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவர் மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள கண்டைனர் யார்டில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இன்று கம்பெனியில் உள்ள கல்மார் அதாவது லாரிகளில் கண்டைனர் பெட்டிகளை ஏற்றி வைக்கும் பெரிய இயந்திரத்திற்கு கீழே சைகை காட்டி இயந்திரத்தை வரவழைத்து கண்டைனர் பெட்டியை ஏற்றும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இவர் கீழே இருந்து சைகை காட்டினார் ஓட்டுனருக்கு வழி காட்டி வந்த போது ஓட்டுநருக்கு கீழே காவலாளி நிற்பது தெரியாமல் கனரக வாகனத்தில் டயரில் துரதிஸ்ட வசமாக அடியில் சிக்கினார். இது சிக்கிய காவலாளி ஆரோக்கியம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக கூடிய பிரித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை கண்ட சக ஊழியர்கள் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆரோக்கியத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இது சம்பந்தமாக மாதவரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான ஓட்டுனரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த ஆரோக்கியத்திற்கு லஷ்மி என்ற மனைவியும் இரண்டு பெண்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதது அங்கு பணிபுரியும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Views: - 2

0

0