மணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

13 July 2021, 5:31 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 16ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு வெளியிடப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கட்சி நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் வரும் 16ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ள நிலையில்,

மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து நாளைய தினம் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளதாகவும், அதன் பிறகு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் கடந்த 5க்கும் மேலாக காவல்துறை தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் காவல்துறை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Views: - 304

0

0