சென்னை: கொடுங்கையூரில் குட்கா மற்றும் மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சென்னை கொடுங்கையூர் எம்.ஆர். நகர் பகுதியில் மதுபானக் கடைகள் மூடியவுடன் சிலர் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கொடுங்கையூர் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது கொடுங்கையூர் எம். ஆர். நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களிடம் 20 மது பாட்டில்கள் மற்றும் 10 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர்கள் கொடுங்கையூர் ஆதிவாசி காலனி பகுதியை சேர்ந்த திலீப் மற்றும் சேலவாயல் பகுதி யைச்சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0