பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

Author: kavin kumar
9 October 2021, 6:51 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோவுக்கு மேலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள சிறு நாயக்கன்பட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பதுக்கப்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், எஸ்பி தனிப் பிரிவு காவல்துறையினர் சிறு நாயக்கன்பட்டியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது தனியார் கட்டிடத்தில் மர்மமான முறையில் இந்த வாகனங்கள் மற்றும் நபர்கள் வந்து செல்வதை அறிந்து அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது 1000 கிலோவுக்கு மேலான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் இவர்கள் குட்கா பான்மசாலா கொண்டு செல்வதற்காக பயன்படுத்திய இரண்டு நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா மற்றும் பான் மசாலா கடத்தலில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர் யானை சேகர் கைது செய்யப்பட்டு அம்பாத்துரை காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து அம்பாத்துரை காவல் நிலைய எல்லை பகுதிகளில் குட்கா பான் மசாலா பொருட்கள் பிடிக்கப்படுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 210

0

0