வாடகைக்கு வீடு எடுத்து குட்கா பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது

16 September 2020, 6:50 pm
Quick Share

மதுரை: மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து குட்கா பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 587 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

மதுரை தெற்குவாசல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நவபத்கானா தெரு பகுதியில் குட்கா குடோன் செயல்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது,அதனைத் தொடர்ந்து சம்பவத்திற்கு சென்ற காவலர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகள் வீடு அனைத்தையும் அதிரடியாக சோதனை செய்தபோது அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த மலையரசு என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது,அவர் குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து சுமார் 587 கிலோ குட்கா, பான்மசாலா, கணேஷ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.