ஒன்றரை லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல்

21 September 2020, 11:07 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை வாகன சோதனையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லக்கோட்டை பிரிவில் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பார்த்திப்பன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தன.

இதையடுத்து வாகனத்தில் இருந்த ஒன்றை லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், குட்கா பொருள்களை கடத்தி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தை ஒட்டி வந்த விருதுநகரை சேர்ந்த அந்தோனிமுத்து என்பவரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் அந்தோனியிடம் நடந்திய விசாரனையில் விருதுநகரை சேர்ந்த ஸ்டீபன் மற்றும் ஜோசப் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.