குடோனில் பதுக்கி வைத்திருந்த குட்கா பறிமுதல்…

2 August 2020, 11:09 pm
Quick Share

மதுரை: மதுரையில் சட்டவிரேதமாக பதுக்கி வைத்திருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை செல்லூர் 60 அடி சாலை பகுதியில் தனியார் குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து செல்லூர் காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற தத்தநேரி பகுதியில் இருக்கக்கூடிய பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான குடோனில் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது சட்டவிரேதமாக விற்பனை செய்ய குட்கா பதுக்கி வைத்திருந்த கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடோனில் இருந்த சுமார் 263 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்த காவல்துறையினர், சுமார் 62 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.