மினி வேனில் கடத்திவரப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

Author: Udayaraman
7 October 2020, 9:57 pm
Quick Share

வேலூர்: பள்ளிகொண்டா அருகே மினி வேனில் கடத்திவரப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவரை கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடி போலீசார் வாகன சோதனையின் போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் அந்த வாகனத்தில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக மினி வேனில் பெரிய நிறுவனங்களின் பொருட்களை ஏற்றி சொல்லுவதை போல குட்காவை பாக்ஸ்யில் பேக்கிங் செய்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மேலும் ஒட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருப்பத்தூரை சேர்ந்த ஸ்டீபன் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கைது செய்து மினி வேனில் கடத்தி வரப்பட்ட குட்கா மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்து பள்ளிகொண்டா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் குட்கா கடத்தி வருவது தொடர்கதையாகவே உள்ளன.

Views: - 33

0

0