பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

24 August 2020, 5:44 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக தந்தை, மகன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் ராம கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் காவல்த்துறையினர் கடையில் சோதனை மேற்கொண்டதில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த
ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 4,871 குட்கா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடைசெய்யபட்ட 22கிலோ தடைசெய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யபட்டுள்ளன. இது தொடர்பாக ராமகிருஷ்னன் அவரது தந்தை ஆத்திமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 1

0

0