முந்திரி வியாபாரி செல்வமுருகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

27 November 2020, 6:07 pm
Quick Share

புதுச்சேரி: நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வ முருகன் மரணம் விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட நீதிபதி முன்னிலையில் உடல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மறு கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப் பட்டது .

கடந்த மாதம் நெய்வேலியை சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார், அவர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டு விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஒரு சில தினங்களிலேயே செல்வமுருகன் உயிரிழந்தார். செல்வமுருகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டிய உறவினர்கள், காவலர்கள் தான் அவரை அடித்துக் கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.

இருப்பினும் செல்வமுருகனின் உடலை பெற்றுக் கொள்ளாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே செல்வமுருகனின் மனைவி பிரேமா, அவரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்வமுருகனின் மனைவி பிரேமாவின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என விருத்தாச்சலம் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் உயிர்நீதி மன்ற வழிகாட்டுதல் படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மறு உடற்கூறு ஆய்வுக்கு நீதிபதி ஆனந்த் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து இன்று செல்வ முருகனின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் விருதாச்சலம் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் மறு பிரேத உடற் கூறு ஆய்வு செய்யப்பட்டடது. இதனையடுத்து உடற கூறு ஆய்வு முடிந்து மாலை 3 மணியளவில் அவரது உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டது. உடற்கூறு ஆய்வு முடிவு நாளை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

Views: - 0

0

0