பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

25 February 2021, 5:29 pm
Quick Share

ஈரோடு: தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவித்த கொரோனா நிவாரண நிதியை உடனடியாக வழங்கக்கோரி ஈரோடு கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 3000 ரூபாய் ஆக உயர்த்தி வழங்க வேண்டும், அறுபது வயது நிறைவடைந்த அனைத்து நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், வாரத்தில் 6நாட்களும் தேவையான நூல்களை வழங்க வேண்டும், தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு அறிவித்த கொரோனா நிவாரணம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாயை அனைத்து நெசவாளர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும்

மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி சாலையில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் சுமார் 8 மாத காலங்களாக பழக்கத்தினால் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரமின்றி சிரமப்படுவதாகவும், எனவே தமிழக அரசு போர்கால அடிப்படையில் நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்கி கைத்தறி நெசவு தொழிலை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Views: - 1

0

0