என்னது… இரண்டு வாழைப் பழம் சாப்பிடுவதில் இவ்வளவு இருக்கா?

Author: Hemalatha Ramkumar
2 March 2023, 7:16 pm
Quick Share

ஒரு நாளைக்கு 2 வாழைப்பழம் சாப்பிட்டால், உங்கள் உடலுக்குள் இத்தனை மாற்றங்கள் நடக்குமா? அப்படி என்ன மாற்றங்கள். வாருங்கள் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

ஒவ்வொரு நாளும் நாம் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்று ஏதேதோ திட்டங்களை வகிப்பது உண்டு. ஆரோக்கியத்தை பேணி பாதுக்காக்க என்னவெல்லாமோ முயற்ச்சி செய்து பார்ப்போம். ஆனால், நம் ஆரோக்கியத்தை உண்மையிலேயே நாம் நன்றாக பராமரிக்க விரும்பினால், நாம் உண்ணும் செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அளவைக் குறைக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஆம், பெரும்பாலும் நாம் ருசியான நொறுக்குத் தீனிகளைத் தானே விரும்பி உண்கிறோம். அது ஆரோக்கியமானது அல்ல என்று தெரிந்தும் அதனை தவிர்க்க முடியாமல் தவிக்கிறோம். ஆனால், உண்மையில் இயற்கை நம்மக்கு பல அற்புதமான உணவுப் பொருட்களை வழங்குகிறது. அதில் ஒன்று தான் வாழைப் பழம். இதில் வைட்டமின், மினரல் என நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அது நம் உடலுக்குள் ஏற்படுத்தும் அற்புதங்கள் தான் பல.

இரத்த அழுத்தம்
வாழைப்பழத்தில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. எனவே, இது உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக அமைகிறது!

மலச்சிக்கல்
வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து தான் உங்கள் மலச்சிக்கலுக்கு சிறந்த தேர்ர்வு அளிக்கிறது!

ஆற்றல்
வாழைப்பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, அவை விரைவான ஆற்றல் வழங்குவதில் சிறந்து விளங்குகின்றன. மேலும் கூடுதல் போனஸாக, இதில் உள்ள பொட்டாசியம் தசைப்பிடிப்புகளைத் தடுக்க உதவுகின்றன.

நெஞ்செரிச்சல்
நீங்கள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், வாழைக் காய்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் இயற்கையான ஆன்டாக்சிட்கள் இருப்பதால் நெஞ்செரிச்சலை குணப்படுத்துகின்றன.

இரத்த சோகை
இரும்புச் சத்து குறைபாடு இருந்தால், வாழைப்பழம் அதற்கு உதவுயாக இருக்கும். அது இரத்த சிவப்பணு மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தூண்டுகிறது.

மனச்சோர்வு
வாழைப்பழத்தில் டிரிப்டோபான் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? நம் உடல் இதை செரோடோனினாக மாற்றுகிறது, இது நமக்கு மனச்சோர்வை போக்கி ஓய்வெடுக்கவும் மகிழ்ச்சியாகவும் இருக்க உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 317

0

0