சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் தீ விபத்து

Author: Udayaraman
1 October 2020, 8:38 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில்  மின்கசிவால்  ஏற்பட்ட தீவிபத்தில் 1 ,50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு  அருகே உள்ள எட்டாவது மைல்கல்  பகுதியில் சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருபவர் முத்துக்குமரன் இவரது மனைவி நிம்மியம்பட்டு பகுதியில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் காலையில் வழக்கம்போல் பணிக்குச் சென்று விட்ட நிலையில் பிற்பகல் அவரது வீட்டில்  ஏற்பட்ட  மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிவதாக அப்பகுதி மக்கள் சிலர் கண்டு ஆலங்காயம் தீயணைப்பு துறையினர் மற்றும் முத்துக்குமரனுக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின்பேரில் ஆலங்காயம் தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 7 சவரன் நகை மற்றும் பொருட்கள் ஆவணங்கள் ஒளித்து 1.50 லட்சம்மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 41

0

0