அரசு கோவிட் மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் ஆய்வு : ஊழியர்களை பாராட்டிய அமைச்சர்

29 November 2020, 5:42 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கோவிட் மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆய்வுக்கு வந்த சுகாதார துறை அமைச்சரிடம் நோயாளிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது. இதுவரை கொரோனாவால் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 609 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அரசு கோவிட் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனையில் 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு கோவிட் மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர்களை சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்கும் ஊழியர்களை பாராட்டிய அமைச்சர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள், மருத்துவமனையில் அளிக்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், தரமான உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சரிடம் நோயாளிகள் தெரிவித்தனர்.

Views: - 16

0

0