அரியலூர் மாவட்டத்தில் சுகாதார குழுவினர் ஆய்வு

3 September 2020, 4:32 pm
Quick Share

அரியலூர்; அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பேருந்துகள் மற்றும் கடைவீதிகளில் முககவசம் பயன்படுத்துவதை சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் வழிபாட்டு தளங்கள் திறப்பதற்கும் போக்குவரத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. எனவே பேருத்துகளில் பயணிப்போர் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள் முககவசம் பயன்படுத்துகிறார்களா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியரால் கண்காணிக்கும் குழு அமைக்கபட்டுள்ளது. இந்த குழுவினர் அரியலூர் அருகே வி.கைக்காட்டிக்கு வந்த பேருந்தினை நிறுத்தி ஒட்டுனர், நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணிப்போர் முககவசம் அணிந்துள்ளார்களா என்பதை இன்று ஆய்வு செய்தனர்.

முககவசம் அணியாதவர்களுக்கு முககவசம் அளித்து கொரோனாவின் தீவீரத்தை எடுத்து கூறினர். மேலும் கடைவீதிகளில் ஹோட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகளில் பணிபுரிவோர் முககவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளி கடைபிடிக்கபடுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர். முககவசம் அணியாமல் வந்த வாகன ஒட்டிகளுக்கு அபாராதமும் விதிக்கபட்டது.

Views: - 3

0

0