உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

16 November 2020, 10:43 pm
Quick Share

நீலகிரி: உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிவித்த படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
இதில் நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் கோத்தகிரி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வந்த நிலையில் இரவிலிருந்து பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது இதனால் கடும் குளிர் நிலவுகிறது.

குறிப்பாக உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளான தலைக்குந்தா ,பிங்கர் போஸ்ட், சேரிங் கிராஸ், குன்னூர் சாலை, என மேலும் பல பகுதிகளில் தற்போது வரை இடைவிடாது மழை பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவி வருகிறது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் மலைசேதங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0