பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

Author: Aarthi Sivakumar
6 December 2021, 1:18 pm
Quick Share

கோவை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவை மாநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவை மாநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பகுதிகளில் மோப்ப நாயை கொண்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பல கட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவையில் கடந்த ஒரு வார காலமாக போலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக கோவையில் முக்கிய இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையத்தில் மோப்ப நாய்களை கொண்டும் வெடிகுண்டு கண்டறியும் டிடெக்கர் கருவிகளைக் கொண்டும் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டிசம்பர் 6ம் தேதியான இன்று கண்காணிப்பு மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் முக்கிய இடங்களான ரயில் நிலையம், விமான நிலையம், உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால் ஆகிய பல இடங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களை கொண்டும் வெடிகுண்டுகளை கண்டறியும் டிடெட்டர் கருவிகளை கொண்டும் தீவிர சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Views: - 107

0

0