உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…
Author: kavin kumar8 August 2021, 4:27 pm
நீலகிரி : நீலகிரி மாவட்ட உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து உதகையில் இன்று காலை முதல் வானம் அடர்ந்த மேகமூட்டத்துடன் காணப்பட்டும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இதனையடுத்து உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான லவ்டேல், மேல்கோடப்பமந்து, எல்க்ஹில் குமரன் நகர், தொட்டபெட்டா, சேரிங் கிராஸ், உதகை மத்திய பேருந்து நிலையம்,
எச்பி எஃப் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த கனமழையின் காரணமாக உதகை நகரில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதைகளில் மழை நீர் சூழ்ந்த காணப்பட்டதால், பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் அடைந்தனர். மேலும் உதகையில் கடும் குளிருடன் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
0
0