கோவை: கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
கோவையில் வரும் 27 மற்றும் 28ம் தேதி இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆனால், இன்று காலை முதலே கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி, உக்கடம், காந்திபுரம், பீளமேடு, கவுண்டர் மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
கோவையில் வேறு எந்தெந்த பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை கமெண்டில் தெரிவிக்கலாம்.
Views: - 178
0
0