குமரியில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை: சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் நீர் பெருக்கெடுத்து ஓடியது

16 November 2020, 3:54 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரியில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் நீர் பெருக்கெடுத்து ஓடியது

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. அதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து முடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி,  நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, தக்கலை உள்ளிட்ட இடங்களில் கன மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 29  மிமீ மழை பதிவாங்கியுள்ளது.

Views: - 18

0

0