கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை

6 September 2020, 8:43 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதேபோல இன்று பிற்பகலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

மாலை 5 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. மாநகரில் இடையார்பாளையம், கோவில்மேடு, சாய்பாபா காலனி, உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வட கோவை, காந்திபுரம், சிவானந்தா காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 5

0

0