தாராபுரம் பகுதியில் பெய்த கனமழை: 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

5 November 2020, 1:26 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பொதுப்பணித்துறை வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்தது. இந்த மலையானது திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்ச மலையாக தாராபுரத்தில் 165 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கனமழையின் காரணமாக அமராவதி பாசன ராஜா வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. மேலும் தாராபுரம், மூலனூர், புதுப்பாளையம் பகுதிகளில் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் மூலனூர் அருகே கிளாங்குண்டல் பகுதியில் தரைமட்ட பாலத்தில் தண்ணீர் மூழ்கியதால் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாராபுரம் பகுதியில் மூன்றாவது மற்றும் 5வது வார்டு பகுதிகளில் மழை சேதத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை அதிமுக நகர செயலாளர் காமராஜ் மற்றும் பங்க் மகேஷ் உள்ளிட்ட அதிமுகவினர் மூன்றாவது மற்றும் ஐந்தாவது வார்டு பகுதியில் உள்ள மழைக்கு சேதமான வீடுகளை பார்வையிட்டனர்.

Views: - 21

0

0