கனமழையால் சரிந்து விழுந்த மேம்பால சுவர்: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை

17 November 2020, 9:28 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள மேம்பாலத்தின் இடது பக்கம் சுவர் கன மழை காரணமாக சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் கடந்த இரு நாள்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக விருதுநகர் அருகே உள்ள ஆர். ஆர் நகரில் கன்னியாகுமரி- சென்னை சாலையில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை முன்பு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் இடது புறம் பக்கவாட்டு சுவர் தொடர் மழை காரணமாக இன்று மாலை சரிந்து விழுந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக இப்பாலத்தை சீரமைத்து எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் பாலம் இடிந்து விழுந்த காரணத்தால் சாத்தூர் விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.ஆர். நகர் பகுதியில் மட்டும் வாகன போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Views: - 15

0

0