உதகையில் கடும் மேகமூட்டம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

15 January 2021, 1:42 pm
Quick Share

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழையும் கடும் மேகமூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் ,கோத்தகிரி, உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் மழையின் அளவு குறைந்து காணப் பட்டிருந்த நிலையில் நகர் முழுவதும் கடும் மேகமூட்டம் காணப்படுவதோடு குளிரும் நிலவுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றன அன்றாட கூலி பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

Views: - 4

0

0