11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது…

Author: Udhayakumar Raman
21 October 2021, 4:29 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலத்தைச் சேர்ந்த பட்டு மனைவி சிவமலை தனது மகன் ஏழுமலையின் குடும்ப பிரச்சினை காரணமாக சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்துக்கு சமாதானம் பேசவந்தபோது அவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 4 பேரை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் தொடர்புடைய சின்னசேலத்தை சேர்ந்த சின்னதுரை தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் சின்னதுரை உறவினர் சுப நிகழ்ச்சிக்கு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு பதுங்கி இருந்த போலீசார் சுப நிகழ்ச்சிக்கு வந்த சின்னத்துரையை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து சங்கராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சின்னதுரையை 15 நாள் சிறையில்அடைக்க மாஜிஸ்திரேட் ராஜசேகர் உத்தரவிட்டதை அடுத்து சின்ன துறையை திருக்கோவிலுர் சிறையில் அடைத்தனர். இவன் மீது சங்கராபுரம் சின்னசேலம், கள்ளகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 85

0

0