துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கபட்ட மூலிகைகஞ்சி

20 October 2020, 4:26 pm
Quick Share

அரியலூர்; அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மூலிகைகஞ்சி வழங்கபட்டது.

அரியலூர் நகர பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் துப்புரவு பணியாளர்களின் பங்கு அளப்பரியது. இந்நிலையில் துப்புரவு பணியாளர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முககவசம், கையுறை, சானிடைசர், ஜிங்க் மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு வந்தது. இந்நிலையில் இன்று நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மூலிகை கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் அரிசி, மிளகு, பச்சைபயிறு, பாசிபயிறு, வெந்தயம், சீரகம், ஒமம் அடங்கிய மூலிகை கஞ்சி தயாரித்து நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கபட்டது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது உள்ளிட்ட ஏராளமான நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 14

0

0