பணியின்போது வீர மரணம் அடைந்தவர்களுக்கு காவல் துறை சார்பில் வீர வணக்கம்

Author: Udhayakumar Raman
21 October 2021, 3:31 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பணியின்போது, வீர மரணம் அடைந்தவர்களுக்கு, காவல் துறை சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், சீனப் படையினர் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 21-ம் தேதி ‘காவலர் வீர வணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் தலைமையில், காவலர்கள், காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், வீர வணக்கம்செலுத்தினர். கடந்த ஒரு வருடத்தில் இந்திய அளவில் பணியின் போது வீரமரணம் அடைந்த, 377 காவலர்களுக்கு, காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூண் அருகே மலர் வளையம் வைத்து 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் எம். சத்யபிரியா , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயராம், காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Views: - 88

0

0