நெடுஞ்சாலைத்துறை – மாநகராட்சியை கண்டித்து திமுக சார்பில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம்:சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ அறிவிப்பு ;

18 November 2020, 2:48 pm
Quick Share

கன்னியாகுமரி: நெடுஞ்சாலைத்துறை – மாநகராட்சியை கண்டித்து திமுக சார்பில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் அறிவித்துள்ளார்.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ற வகையிலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையிலும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது .எனவே பொதுமக்கள் அச்சத்துடன் இச்சாலைகளில் சென்று வருகிறார்கள் .

சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும், மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே நகரின் தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக செப்பிடவில்லை என்றால் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வருகின்ற 28-ந் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.