மலையகோயில் ஜல்லிக்கட்டு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

29 January 2021, 7:40 pm
Quick Share

புதுக்கோட்டை: மலையகோயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மலையகோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 375 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றுள்ளன. காளைகளை அடக்க 220 மாடுபிடி வீரர்கள் களத்தில் தயாராக உள்ளனர். வாடிவாசலில் இருந்து அறுத்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வீரர்களைப் பிடியில் சிக்காமல் வீரர்களை திணறடித்து வருகின்றன. அதேபோன்று அடங்க மறுக்கும் காளைகளை வீரர்கள் அடக்க முயற்சி செய்தனர். போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.

Views: - 0

0

0