மதுக்கடைகளை திறந்த அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம்

21 June 2021, 4:57 pm
Quick Share

திருச்சி: கோவில்களை திறக்காமல் மதுக்கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. உடனடியாக தமிழக அரசு பக்தர்களின் வழிபாட்டிற்காக அனைத்து கோவில்களையும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் 1 கிலோ கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை திறந்த அரசு கோவில்களை திறக்க கூடாதா. உடல் நலனை கெடுக்கும் மது விற்பனையை திறந்துவிட்ட அரசு, மன வலிமையை தரும் தெய்வ வழிபாட்டிற்கு வழி செய்ய வேண்டும். என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ஸ்ரீராம் ஜீ தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மாரி ஜீ முன்னிலை வகித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Views: - 82

0

0