கொரோனா எத்தனை ஆயிரம் பேரை கொண்டு போவ போகிறது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Author: Udhayakumar Raman
6 August 2021, 9:58 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் கட்சியில் இணைப்பு விழாவில் கொரோனா காலத்தில் சட்டத்தை போட்டுவிட்டு நாமே மீறக்கூடாது எனவும், கொரோனா எத்தனை ஆயிரம் பேரை கொண்டு போவ போகிறது என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுகவில் கட்சியில் இணையும் நிகழ்ச்சி கட்சியின் பொதுசெயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளித்தான் பட்டறை பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் விநாயகம், அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதில் கலந்துகொள்ள வந்த திமுக பொதுசெயலாளர் அமைச்சருமான துரைமுருகன் தனியார் திருமண மண்டப விழா மேடைக்கு சென்று விழாவை நடத்தாமல் அமைச்சர் துரைமுருகனே பேசினார். இவ்விழாவில் அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் இப்படி சமூக இடைவெளியின்றி உட்காரலாமா கொரோனா காலத்தில் சட்டத்தை போட்டுவிட்டு நாமே அந்த சட்டத்தை மீற கூடாது,

இங்கு நிறைய பேர் முகக்கவசம் அணியாமல் வந்திருக்கிறீர்கள் கொரோனா ஒரு கொடிய நோய் இன்னும் எத்தனை ஆயிரம் பேரை கொண்டு செல்ல போகிறது தெரியவில்லை. நீங்கள் தடுப்பூசி போட்டுகொள்ளுங்கள் இருந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இது போன்று நெரிசல் இருக்க கூடாது நன்றி என கூறி சில நிமிடங்களில் விழாவை முடித்துவிட்டார். பின்னர் நடந்து செல்லும் கால் இடறிவிழுந்தார் பின்னர் அவர் கட்சியினருடன் சென்றுவிட்டார்.

Views: - 525

0

0