காங்கிரஸ் கட்சி 2019 தேர்தலில் எப்படி பொய்களை கூறி வெற்றி: பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

Author: Udhayakumar Raman
28 March 2021, 6:27 pm
Quick Share

கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சி 2019 தேர்தலில் எப்படி பொய்களை கூறி வெற்றி சொன்னார்களோ அதே ஆயுதத்தை இப்போதும் பயன்படுத்தி வருவதாக பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவளத்தில் துறைமுகம் வராது என்று ஏற்கனவே கூறப்பட்டு விட்டது. எனினும் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். வாதத்துக்கு மருந்து உண்டு. ஆனால் விதண்டாவாதத்துக்கு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் எப்படி பொய்களை கூறி வெற்றி வெற்றார்களோ அதே ஆயுதத்தை அதுவும் துறுப்பிடித்த ஆயுதத்தை இப்போதும் பயன்படுத்தி வருகிறார்கள்.

துறைமுகம் வராது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார். நானும் பலமுறை எடுத்து கூறி விட்டேன். இதற்கு மேல் நான் விளக்கிச் சொல்ல முடியாது. துறைமுகம் வருவதால் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது துறைமுகம் வராததால் அதற்கு பதிலாக வேலைவாய்ப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கை பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 68

0

0