சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொடுங்கையூர் ஆர்.ஆர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வந்து செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கணவர் ஆகாஷ் என்பவரை தேடி வந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டார். கணவன் மனைவி இருவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0